Blogger Templates

Tuesday, February 21, 2012

பெயரில்லாமல் போல்டரை உருவாக்க முடியுமா?



 பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.
நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.
முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் �ealt�f கீயை அழுத்தியவாறே இலக்கம் �e255�� ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Saturday, February 18, 2012

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...


பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .

வினாடியில் கணினி அணைந்து விடும்.

Friday, February 17, 2012

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?


நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம்.

இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?







கணனியில் செய்யப்படும் வேலைகளுக்கான 101 ரன் கட்டளைகள்.




இவை உங்கள் கணனியில் செய்யப்படும் வேலைகளுக்கான கட்டளைகள் ஆகும். இவற்றை ஆங்கிலத்தில் run commands என்று அழைப்பார்கள். இவற்றை உங்கள் கணனியில் run மெனுவில் இட்டால் அவற்றுக்கான கட்டளைகள் கிடைக்கும்.




Thursday, February 16, 2012

உங்கள் காதலின் வலிமைஅறிந்துகொள்​ளுங்கள்



ஒவ்வொரு காதலர்களும் தமது காதலின் வலிமை, வெற்றி பற்றி அறிய மிகவும் ஆவலாக இருப்பார்கள்.
இவர்களுக்காக இந்த காதலர் தினத்தில் புதிய இலவச மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபாட்களிலும், ஐபோன்களிலும் இயங்கக்கூடிய இம்மென்பொருள் 14 வகையான காதலை வெளிப்படுத்தும் தீம்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.
Valentine’s Day 2012: 14 best free apps for your love என பெயரிடப்பட்டுள்ள இந்த மென்பொருள் 20.3MB அளவை கொண்டுள்ளதுடன் ஆங்கிலம், சைனிஸ், பிரென்ச், ஜேர்மன், இத்தாலின், ஸ்பானிஸ், ஸ்வீடிஸ், ஆகிய மொழிகளிலும் கிடைக்கின்றது.

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க....பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...



சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும்.

நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

விண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது


உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய ப்ரோடக்ட் ( சிடி) கீ தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம். அதை மீட்டெடுக்க எளிய வழி உள்ளது. அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள். பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும். பிறகு அதற்குள் i386 போல்டரினுள் சென்று Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள். 

Wednesday, February 15, 2012

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?










                 ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம் உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

Tuesday, February 14, 2012

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?



 நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.


C - Common
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and
R - Research

COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and  Research


Monday, February 6, 2012

கணணியில் மென்பொருள்களை மறைப்பதற்கு!



பொது இடங்களில் கணணியை பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் பிரச்னை, தான் திறந்து வைத்திருக்கும் மென்பொருளை யாராவது பார்த்து தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் தான்.
யாராவது வரும் போது மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்ளலாம். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
Hide It: மிக எளிமையான நிறுவத் தேவையில்லாத மென்பொருள் இதுவாகும். இதன் மூலம் டெஸ்க்டொப்பில் இருக்கும் ஐகான்களைக் கூட மறைத்து வைக்கலாம்.
முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று இந்த மென்பொருளை கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் Task barஇல் இந்த மென்பொருளுக்குரிய