
கணினி ஒன்றினை பொறுத்தவரை அது பல வன்பொருட்களை இணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணினியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணினியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணினியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு நாம் கணினி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும் அவற்றினூடாக கணினி... ஒன்றுடன் இணைக்கக் கூடிய சாதனங்கள் பற்றி அறிந்திருத்தல் இன்றியமையாதது ஆகின்றது.
இரண்டுவகையான மரபுமுறையான இணைப்பான்கள் காணப்படுகின்றன. அவை அவற்றின் முக்கியத்துவம் கருதி இன்றும் நவீன கணினிகளில் தொடர்கின்றது. Serial ports and parallel ports என்பவை அவையாகும். இவை இரண்டும் ஆங்கில எழுத்தான D வடிவில் அமைந்தவை. அதாவது ஒழுங்கீனமான இணைப்புக்களை தவிர்ப்பதற்கும், சரியான இணைப்பு முறையினை இலகுபடுத்துவதற்கும் இந்த வடிவம் துணைசெய்தது. அதனால் இவ்வகை இணைப்பான்கள் (connectors) பல தொழில்நுட்பவியலாளர்களினால் DB என்றோ அல்லது D-subminiature என்றோ அழைக்கப்படுகின்றன. Serial ports வழமையாக 9 மற்றும் 25 PINs கொண்டவையாக காணப்படலாம். இதில் 9 Pins கொண்டவையில் 5 மேற் புறமாகவும் மிகுதி நான்கு கீழ்ப்புறமாகவும் அமைந்து காணப்படும்.
அதே போல் 25 PINs கொண்டதில் 13 மேற்புறமாக அமைந்திருக்கும். இவ்வகை இணைப்புக்களின் மூலம் 1bit தரவுகளே ஒரு நேரத்தில் பரிமாறப்பட்டன. இது இன்றைய கணினி உலகின் மிகக்குறைந்த தரவுப்பரிமாற்ற அளவு. அத்துடன் ஒரு வினாடிக்கு 115 115 kilobits (Kbps) வேகத்தில் தரவுகளை கடத்தின. இவ்வகையான இணைபடபான்களின் துணையுடன் ஒரு கணினியில் mice, external modems, label printers, personal digital assistants (PDAs), and digital cameras போன்ற சாதனங்களின் பயன்பாடுகளை ஒரு கணினியின் வாயிலாக பெறுவதற்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment